ஜல்லிக்கட்டுகாக தமிழகம் முழுவதும் நடந்துவரும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் யாழ்ப்பாணத்தில் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
அந்த பகுதியிலுள்ள நல்லூர் ஆலயத்திற்கு அருகாமையில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. உச்சநீதிமன்ற தடையால் தொடர்ந்து 3ஆவது ஆண்டாக தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடைபெறவில்லை. ஜல்லிக்கட்டுக்கான தடையை உடனடியாக நீக்க வேண்டும் என்று கூறி தமிழகம் முழுவதும் இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்தநிலையில், ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்க வலியுறுத்தி போராடுவரும் தமிழக இளைஞர்களின் போராட்டத்துக்கு ஆதரவாக நல்லூர் சுப்ரமண்ய சுவாமி கோவில் முன்பாக இலங்கை தமிழர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் இளைஞர்கள் மற்றும் பெண்கள், தங்கள் கைகளில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான பதாகைகளை ஏந்தியபடி கலந்துகொண்டனர்.