தென்னாப்பிரிக்காவில் ஸ்டில்ஃபோன்டைன் என்ற இடத்தில் உள்ள மூடப்பட்ட தங்க சுரங்கத்திற்குள் ஏராளமான தொழிலாளர்கள் தங்கம் தேடுதல் வேட்டைக்கு சென்றுள்ளனர். அவர்கள் சுரங்கத்திற்குள் சிக்கிக் கொண்டதால், சுரங்கத் தொழிலாளர்களை மீட்கும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
அவர்களுக்கு தேவையான உணவு மற்றும் தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த சூழலில் சுரங்கத்திற்குள் சிக்கிக் கொண்டவர்களில் 6 தொழிலாளர்கள் உயிரிழந்துவிட்டதாக தென்னாப்ரிக்கா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். அவர்களது உடல்களை மீட்டுள்ள காவலர்கள், மீதமுள்ளவர்களை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.