இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தில் அந்த நாட்டு பிரதமர் பேசியபோது அதனை தடுத்துள்ளார் நாடாளுமன்ற சபாநாயகர் ‘Sir’ லிண்ட்சே ஹோய்ல். இங்கிலாந்து நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் கெய்ர் ஸ்டார்மர், ஆளும் கட்சியை நோக்கி சில கேள்விகளை எழுப்புகிறார்.
அப்போது பிரதமர் போரிஸ் ஜான்சன், விளக்கம் கொடுக்க முயன்றுள்ளார். அது வரம்பை மீற குறுக்கிட்ட சபாநாயகர், “உட்காருங்கள்... நீங்கள் வேண்டுமானால் இந்த நாட்டுக்கே பிரதமராக இருக்கலாம். ஆனால் இந்த அவையில் நான்தான் இன்சார்ஜ்” என காட்டமாக பேசி அவரை உட்கார சொல்லி உள்ளார்.