உலகம்

உயிர் பிரியும் போதும் தங்கையைக் காப்பாற்றிய 5 வயது சிறுமி!

webteam

உயிர் பிரியும் நேரத்தில் கூட தனது தங்கையைக் காப்பாற்றிய 5 வயது சிறுமியின் செயல் காண்போரை கண்கலங்க வைத்துள்ளது.

சிரியாவில், அரசுப் படைகளும் கிளர்ச்சியாளர்களும் கடும் மோதலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கடந்த புதன் கிழமை அன்று இட்லிப் மாகாணத்திலுள்ள அரிஹா என்ற பகுதியில்‌ கிளர்ச்சியாளர்களை குறிவைத்து அரசுப்படைகள் நடத்திய வான்வழி தாக்குதல் நடத்தின. 

இந்த தாக்குதலில் 5 மாடி கட்டடம் ஒன்று இடிந்து விழுந்தது. இதில் கட்டடத்திலிருந்த அம்ஜத் அல் அப்துல்லா என்பவர் வீடும் நொறுங்கியது. வீட்டில் இருந்து அப்துல்லா, அவர் மனைவி ஆஸ்மா ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த அவர்கள் மகள் 5 வயது ரிஹாம், உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். அப்போது தனது 7 மாத தங்கை துகா கீழே விழுந்துவிட கூடாது என்பதற்காக அவரின் சட்டையை இறுக்கமாகப் பிடித்துக்கொண்டார். இதனால் அந்தக் குழந்தை கீழே விழாமல் காயங்களுடன் உயிர் தப்பியது. ஆனால் தங்கையை காப்பாற்றிய 5 வயது சிறுமி ரிஹாம் உயிரிழந்தார்.

இந்த புகைப்படத்தை அந்நாட்டு எஸ்ஒய் 24 என்ற இணைய இதழின் புகைப்பட கலைஞர் பாஷார் அல் ஷேக் என்பவர்   எடுத் துள்ளார். குழந்தைகளை பார்த்து ஒருவர் கதறியபடி தலையில் கைவைத்துக்கொண்டிருக்கிறார். கீழே குழந்தைகள் உயிருக்கு போராடும்படி இருக்கும் இந்த புகைப்படம், சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.