உலகம்

தமிழர்களை கொன்று குவித்தது ராணுவம்: ஒப்புக்கொண்டார் இலங்கை அதிபர்

தமிழர்களை கொன்று குவித்தது ராணுவம்: ஒப்புக்கொண்டார் இலங்கை அதிபர்

webteam

இலங்கையில் இறுதிக்கட்டப்போரின்போது தமிழர்களை கொன்று குவித்த ராணுவ வீரர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அந்நாட்டு அதிபர் மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 

இலங்கையில், விடுதலைப் புலிகளுக்கு எதிராக 2009-ம் ஆண்டில் நடந்த இறுதிகட்டப் போரில் பலர் கொன்று குவிக்கப்பட்டனர். சுமார் 40 ஆயிரம் தமிழர்கள் கொல்லப்பட்டதாக ஐ.நா. புள்ளிவிவரம் கூறுகிறது. இதுபற்றி சர்வதேச விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இறுதிக்கட்டப்போரின்போது தமிழர்களை கொன்று குவித்த ராணுவ வீரர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அந்நாட்டு அதிபர் மைத்ரிபால சிறிசேன கூறியுள்ளார்.

அவர் மேலும் கூறும்போது, அப்போது ஆட்சியில் இருந்தவர்களின் (ராஜபக்சே) கவனத்தை ஈர்ப்பதற்காக, ராணுவத்தினர் சிலர் போர்க்குற்றங்களில் ஈடுபட்டனர் என்றும் இதை மனசாட்சியுடன் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். 

போரில் நாட்டுக்காக சண்டையிட்டவர்களை ஆளும் கட்சி வேட்டையாடி வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டுவதாகவும் ஆனால் இதை தான் நிராகரிப்பதாகவும் ராணுவம் தன் மீதுள்ள கறையை அகற்ற வேண்டிய நேரம் இது என்றும் சிறிசேன தெரிவித்தார். 

சிறிசேன ராணுவத்தினருக்கு ஆதரவாக முதலில் பேசி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.