உலகம்

கட்டாய மதமாற்ற தடை சட்டத்துக்கு ஒப்புதல் அளிக்க மறுத்த பாக். ஆளுநர்

கட்டாய மதமாற்ற தடை சட்டத்துக்கு ஒப்புதல் அளிக்க மறுத்த பாக். ஆளுநர்

webteam

கட்டாய மதமாற்றத்தைத் தடுக்கும் வகையிலான சட்டத்துக்கு ஒப்புதல் அளிக்க பாகிஸ்தானின் சிந்து மாகாண ஆளுநர் மறுப்பு தெரிவித்துள்ளார்.

இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் பாகிஸ்தானில் இந்துக்கள், சீக்கியர்கள் உள்ளிட்ட மதத்தினர் சிறுபான்மையினராக உள்ளனர். சிறுபான்மை மதத்தினர் கட்டாயமாக இஸ்லாமிய மதத்துக்கு மாற வற்புறுத்தப்படுவதாக புகார் எழுந்தது. இந்தநிலையில் கட்டாய மதமாற்றத்தை கிரிமினல் குற்றமாகக் கருதும் சட்ட முன்வடிவு சிந்து மாகாண சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேறியது. இதையடுத்து அந்த சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் பெறுவதற்காக மாகாண ஆளுநர் சீதுஜாமன் சித்திக்குக்கு அனுப்பப்பட்டது. ஆனால், அந்த சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க மறுத்து ஆளுநர் சித்திக் திருப்பி அனுப்பினார். இது இஸ்லாமிய நாடான பாகிஸ்தானில் வசிக்கும் சிறுபான்மையின மக்களுக்கு பின்னடைவாகக் கருதப்படுகிறது.