உலகம்

20,000 ரோஹிங்யா முஸ்லீம்களுக்கு தினமும் உணவு வழங்கி உதவும் சீக்கிய அமைப்பு

20,000 ரோஹிங்யா முஸ்லீம்களுக்கு தினமும் உணவு வழங்கி உதவும் சீக்கிய அமைப்பு

webteam

வங்கதேசத்தில் அகதிகளாக உள்ள 20,000 ரோஹிங்யா இஸ்லாமி‌யர்களுக்கு, சீக்கிய அமைப்பு ஒன்று தினந்தோரும் உணவு வழங்கி வருகிறது.

வங்கதேசத்தில் அகதிகளாக வந்திருக்கும் ரோஹிங்யா இஸ்லாமியர்களுக்கு உணவளிக்கும் பணியில் சீக்கிய தன்னார்வ அமைப்பு ஒன்று ஈடுபட்டு வருகிறது. கால்ஸா சர்வதேச உதவி என்ற அமைப்பு நாள்தோறும் சுமார் 20 ஆயிரம் ரோஹிங்யா இஸ்லாமியர்களுக்கு உணவு வழங்கி வருகிறது. புதிதாக வரும் அகதிகளுக்கு உணவே முதன்மையான பிரச்னையாக இருப்பதால், இந்தப் பணியில் ஈடுபட்டுவருவதாக அந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் தெரிவிக்கிறார்கள். கடந்த ஒரு மாதத்தில் மட்டும் சுமார் 5 லட்சம் ரோஹிங்யா இஸ்லாமியர்கள் வங்கதேசத்துக்கு வந்திருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.