உலகம்

தினமும் 500 டாலர் இழப்பு! அமெரிக்காவில் மலிவு விலையில் பெட்ரோல் விற்கும் சீக்கியர்!

JustinDurai

வாகன ஓட்டுநர்களின் சுமையைக் குறைக்கும் வகையில் அமெரிக்காவில் பெட்ரோல், டீசலை மிகக்குறைந்த விலையில் வழங்கி வருகிறார் சீக்கியர் ஒருவர்.  

அமெரிக்காவில் எரிபொருட்களின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் அந்நாட்டில் சில்லறை பணவீக்கம் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் சென்ற மே மாதத்தில் எரிபொருள் விலை சுமார் 34.6 சதவீதம் அளவுக்கு உயர்ந்தது.

அமெரிக்காவில் பெட்ரோல், டீசல் விலை தாறுமாறாக ஏறிக் கொண்டிருக்கும் நிலையில், அந்நாட்டில் பெட்ரோல் நிலையம் சொந்தமாக வைத்திருக்கும் சீக்கியரான ஜஸ்விந்த்ரே சிங் என்பவர் மிகக்குறைந்த விலையில் ஓட்டுநர்களுக்கு பெட்ரோல், டீசலை வழங்கி வருகிறார்.

நாளொன்றுக்கு  3,785 லிட்டர் அளவிலான எரிபொருளை மிகக்குறைந்த விலையில் ஓட்டுநர்களுக்கு விநியோக்கும் ஜஸ்விந்த்ரே சிங், இதனால் தினமும் தமக்கு 500 டாலர்கள் அளவுக்கு இழப்பு ஏற்படுவதாகக் கூறுகிறார். இதுகுறித்து ஜஸ்விந்த்ரே சிங் கூறுகையில், ''வாகன ஓட்டுநர்களின் சுமையைக் குறைக்கும் வகையில் அவர்களுக்கு குறைந்த விலையில் எரிபொருள் விநியோகித்து வருகிறேன். நான் இப்போது பணம் சம்பாதிக்க இங்கு வரவில்லை. மற்றவர்களுக்கு உதவுவதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்" என்று கூறுகிறார் அவர்.

இதையும் படிக்கலாம்: மூன்றாவது திருமணமா?.. சிங்கப்பூர் காவலர் மீது முன்னாள் மனைவிகள் கொடுத்த அதிர்ச்சி புகார்!