உலகம்

ஜப்பான் தேர்தலில் வெற்றியின் விளிம்பில் பிரதமர் அபே கூட்டணி

ஜப்பான் தேர்தலில் வெற்றியின் விளிம்பில் பிரதமர் அபே கூட்டணி

webteam

ஜப்பானில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் ஷின்சோ அபே தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெறும் நிலையில் இருப்பதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜப்பானில் பிரதமர் அபே தலைமையிலான அரசுக்கு இன்னும் ஓராண்டு பதவிக் காலம் எஞ்சியுள்ள நிலையில், பொருளாதார சீர்திருத்தங்கள் மற்றும் வடகொரியாவுக்கு எதிரான நடவடிக்கை ஆகியவற்றை முன்வைத்து முன்கூட்டி தேர்தல் அறிவிக்கப்பட்டது. வாக்குப்பதிவு முடிந்தவுடன் வாக்கு எண்ணிக்கை தொடங்கிய நிலையில், மொத்தமுள்ள 465 இடங்களில் ஷின்சோ அபே தலைமையிலான லிபரல் டெமாக்ரடிவ் பார்ட்டி கூட்டணி 311 இடங்களில் முன்னிலை வகிப்பதாக முதல் கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.