உலகம்

கடையில் 70 இன்ச் டிவியை திருட முயன்று சிக்கிய நபர் - சிசிடிவி காட்சி வெளியீடு

JustinDurai

ஒரு சூப்பர் மார்க்கெட்டில் வாடிக்கையாளர் போல் நடித்து 70 இன்ச் டிவியை திருடி வெளியே வந்த நபரை வாசலில் நின்ற பாதுகாவலர்கள் மடக்கிப் பிடித்தனர்.

அமெரிக்காவின் சியாட்டில் நகரில் அமைந்துள்ள சூப்பர் மார்க்கெட் ஒன்றில், வாடிக்கையாளர் போல் வந்த ஒரு நபர், 600 டாலர்கள் மதிப்புள்ள 70 இன்ச் டிவியுடன் வெளியே வந்துள்ளார். அப்போது வாசலில் நின்ற பாதுகாவலர்கள் சந்தேகமடைந்து, அந்நபரிடம் டிவி வாங்கியதற்கான ரசீது கேட்டுள்ளனர். ஆனால் அவர் டிவியை தூக்கிக்கொண்டு தப்பித்து ஓட முயற்சிக்கவே, அந்த நபரை மடக்கிப்பிடித்த பாதுகாவலர்கள் போலீசாரிடம் ஒப்படைத்தனர். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

போலீஸ் விசாரணையில் டிவி திருடிய நபரின் பெயர் ஜான் ரே லோமாக் (வயது 55) என்பதும் வீடு இல்லாதவரான அவர் கடைகளில் தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்ததும் தெரிய வந்தது. மேலும், கடந்த மூன்று மாதங்களில் லோமாக் இதே சூப்பர் மார்க்கெட்டில் 22 முறை திருடியிருப்பதாகவும், கடந்த டிசம்பரில் இதேபோன்று டிவியை திருட முயன்றதால் கடைக்குள் நுழைய தடை செய்யப்பட்டார் என்றும் சூப்பர் மார்க்கெட் ஊழியர்கள் தெரிவித்தனர். இதையடுத்து லோமாக் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். ஆனால் லோமாக் வீடற்றவர் என்பதால் நீதிபதி அவரை விடுவித்தார்.