உலகம்

ட்ரம்பை கடுமையாக விமர்சித்த எம்.பி.க்கள் பிளேக், பாப் கார்க்கர் ராஜினாமா

ட்ரம்பை கடுமையாக விமர்சித்த எம்.பி.க்கள் பிளேக், பாப் கார்க்கர் ராஜினாமா

webteam

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பை கடுமையாக விமர்சித்து வரும் அவரது கட்சியை சேர்ந்த அரிசோனா மாகாண எம்.பி ஜெஃப் பிளேக் தனது பதவியை ராஜினாமா செய்தார். அத்துடன் மீண்டும் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்றும் அறிவித்துள்ளார்.

அமெரிக்காவின் செனட் சபையில், உறுப்பினர்கள் மத்தியில் பேசிய ஜெஃப் பிளேக், ட்ரம்பின் பெயரை நேரடியாக குறிப்பிடாமல் அவரை கடுமையாக சாடினார். கண்ணியம் இல்லாமல் பொறுப்பற்ற முறையில் ஆட்சி செய்து வருகிறார். அரசின் இத்தகைய நடத்தைகளால் ஜனநாயகத்துக்கு பெரும் ஆபத்து ஏற்படலாம்.

முன்னதாக பாப் கார்க்கர் என்ற எம்.பி.யும் அதிபர் ட்ரம்ப் ஒரு பொய்யர் என கடுமையாக விமர்சித்தார். உலக அரங்கில் அமெரிக்காவின் நற்பெயரை ட்ரம்ப் கெடுத்துவிட்டார் என்றும் நேரடியாக குற்றம்சாட்டியிருந்தார். சொந்த கட்சியை சேர்ந்த இரு உறுப்பினர்கள் அடுத்தடுத்து ட்ரம்பை குறை கூறி பதவியில் இருந்து விலகி இருப்பது அமெரிக்க அரசியலில் பெரும் புயலை கிளப்பியுள்ளது.