உலகம்

நாளை, அதிபர் தேர்தல்: உச்சகட்ட பாதுகாப்பில் இலங்கை

webteam

இலங்கையில் நாளை அதிபர் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அந்நாடு முழுவதும் உச்சக்கட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 

கோத்தபய ராஜபக்ச, சஜித் பிரமேதாச உள்ளிட்ட 35 பேர் இலங்கை அதிபர் தேர்தலில் போட்டியிடுகின்றனர். வாக்குப்பதிவு நாளை காலை 7 மணிக்குத் தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது. இதையொட்டி, வாக்குப்பதிவுக்குத் தேவையான உபகரணங்கள், வாக்குச்சாவடி மையங்களுக்கு எடுத்துச் செல்லும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றன. 

சுமார் ஒரு கோடியே 67 லட்சம் பேர், இலங்கை அதிபர் தேர்தலில் வாக்களிக்கும் உரிமை பெற்றுள்ளனர். அதிபர் தேர்தலையொட்டி, இலங்கை முழுவதும் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். 

தேர்தலை கண்காணிக்க இந்தியாவில் இருந்து 3 தேர்தல் கண்காணிப்பாளர்கள் உட்பட 14 வெளிநாட்டு பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதிபர் தேர்தலில் அசம்பாவிதங்களைத் தவிர்க்க, கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.