உலகம்

ஆப்கன் உள்நாட்டு பாதுகாப்பை அதிகரிக்க பாதுகாப்பு ஆணையம் - தலிபான் அமைச்சரவை முடிவு

ஆப்கன் உள்நாட்டு பாதுகாப்பை அதிகரிக்க பாதுகாப்பு ஆணையம் - தலிபான் அமைச்சரவை முடிவு

Veeramani

ஆப்கானிஸ்தானில் உள்நாட்டு பாதுகாப்பை அதிகரிக்கும் வகையில் பாதுகாப்பு ஆணையம் அமைக்க தலிபான் அமைச்சரவையில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் நடந்த கூட்டத்தில், அரசின் பாதுகாப்பு நடவடிக்கைகள், ஒவ்வொரு அமைச்சகத்தின் பணிகளை மேம்படுத்துவது தொடர்பான நடவடிக்கைகளை எடுப்பது உள்ளிட்டவை தொடர்பாக ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. குறிப்பாக உள்ளூர் மக்களுக்கு பாஸ்போர்ட், வெளிநாட்டில் இருந்து வருவோருக்கு விசா வழங்கும் பணிகளை மீண்டும் தொடங்க உள்துறை அமைச்சகத்திற்கு அறிவுத்தப்பட்டது. காபூல் உள்ளிட்ட நகரங்களில் கொள்ளையை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், முப்படைகளின் கூட்டு பாதுகாப்பு ஆணையத்தை உருவாக்கவும் ஒரு மனதாக முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.