உலகம்

'சர்வாதிகாரம் ஒழிக' - ஈரானில் ஹிஜாப் போராட்டத்தில் இறங்கிய பள்ளி மாணவிகள்

Abinaya

ஈரானில் 22 வயதான மாஷா அமினி என்ற பெண் கடந்த செப்டம்பர் 13ஆம் தேதி, முறையாக ஹிஜாப் அணியாத காரணத்தால் கைதுசெய்யப்பட்ட மஹஸா ஆமினி என்ற பெண் உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து, ஹிஜாபுக்கு எதிராக ஈரான் நாட்டுப் பெண்கள் தொடர்ந்து போராட்டம் நடத்திவருகின்றனர். தற்போது இந்த போராட்டத்தில் மாணவியர்களும் இணைந்து உள்ளனர். 

மாஷா ஆமினியின் மரணத்தைத் தொடர்ந்து, ‘அறநெறிக் காவலர்கள்’ எனும் பெயரில் ஈரான் நாட்டுக் காவலர்கள் அடக்குமுறை செய்வதாக பெண்கள் தொடர்ந்து போராட்டம் நடத்திவருகின்றனர். இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர பல்வேறு ஒடுக்குமுறைகளை ஈரான் நாட்டு அரசு செய்து வருகிறது.


ஒஸ்லோவை தளமாகக் கொண்ட ஈரான் மனித உரிமைகள் (IHR) படி, 3 வாரங்களாக தொடரும் இந்த போராட்டத்தில் குறைந்தது 92 பேர் வரை காவல்துறையினரால் கொல்லப்பட்டு இருக்கலாம் என்றுள்ளது.


இந்நிலையில்,ஹிஜாப் போராட்டம் மேலும் வலுவடைந்துள்ளது, ஈரானிய மாணவிகளும் போராட்ட களத்தில் இறங்கியுள்ளனர். ஈரான் நாட்டு தலைவரான அலி கொமேனிக்கு எதிரான கோஷங்களை எழுப்பி வருகிறார்கள். மேலும் தங்கள் ஹிஜாப்களை அகற்றி, ஆங்காங்கே பேரணிகளையும் ‘சர்வாதிகாரம் ஒழிக’ போன்ற கோஷங்களையும் எழுப்பி வருகின்றனர். போராட்டத்தில் ஈடுப்பட்டு வரும் மாணவிகளை காவல்துறையினர் போராட்ட களத்திலிருந்து அவர்களை இழுத்து செல்கின்றனர். 

இதனை தொடர்ந்து, ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத்தில், ஹிஜாப்பிற்கு எதிராக குரல் எழுப்பிய ஸ்வீடனைச் சேர்ந்த, பெண் உறுப்பினர் அபீர் அல் சலானி, தனது தலைமுடியை வெட்டி ’ஈரான் பெண்களுக்கு விடுதலை வேண்டும்’  முழக்கமிட்டபடியே தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.