உலகம்

வைரலானது தாக்குதல் வீடியோ: சவுதி இளவரசர் திடீர் கைது!

வைரலானது தாக்குதல் வீடியோ: சவுதி இளவரசர் திடீர் கைது!

webteam

சவுதி அரேபிய இளவரசர் சவுத் அப்துல் அஜிஸ், பொதுமக்களைத் தாக்கும் வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலானதை அடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சவுதி அரேபிய இளவரசர் சவுத் அப்துல் அஜிஸ், பொதுமக்களைத் தாக்கும் வீடியோ நேற்று வெளியானது. அவரால் தாக்கப்பட்டவர்கள் படுகாயமடைந்துள்ளனர். இளவரசரால் காயமடைந்த ஒருவர், ரத்தம் சொட்ட சொட்ட காரில் இருந்து இறங்குவது போலவும் ஒருவரின் நெஞ்சில் காலால் மிதித்து பின்னர், முகத்தில் இளவரசர் குத்துவது போலவும் இன்னொருவரை துப்பாக்கியால் மிரட்டுவது போலவும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன. இந்த வீடியோவை சமூக வலைத்தளங்களில் 2 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர்.
இதையடுத்து சவுதி மன்னர் சல்மான் விசாரணைக்கு உத்தரவிட்டார். அதன் தொடர்ச்சியாக சவுதி இளவரசர் சவுத் அப்துல் அஜிஸ் கைது செய்யப்பட்டுள்ளார். 
அவருடன் இணைந்து தாக்குதலில் ஈடுபட்டதாகவும் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.