உலகம்

குட்டை பாவாடை அணிந்த பெண் கைது - சவூதி அரசு அதிரடி

webteam

இஸ்லாமிய சட்ட திட்டங்களுக்கு எதிராக பொது இடத்தில் குட்டை பாவாடை அணிந்து பொது இடத்தில் சுற்றும் வீடியோவை இணையத்தில் வெளியிட்ட பெண்ணை போலீசார் கைது செய்தனர். 

இஸ்லாமிய சட்ட திட்டங்கள் கடுமையாக கடைபிடிக்கப்படும் சவுதி அரேபியாவில் இளம்பெண் ஒருவர் குட்டை பாவாடை அணிந்து பொது இடத்தில் நடந்து சென்ற வீடியோ வெளியானது. குட்டை பாவாடையுடன் பாலைவனத்திலும், வரலாற்று சிறப்பு மிக்க கோட்டைக்குள்ளும் நடந்து செல்லும் ஸ்னாப்சாட் வீடியோவை அப்பெண் வெளியிட்டிருந்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியதை தொடர்ந்து அப்பெண் கைது செய்யப்பட்டுள்ளார். 
இந்த தகவலை சவுதி அரேபிய டிவி ஒன்று ட்விட்டர் மூலம் தெரிவித்துள்ளது. இச்சம்பவத்திற்கு ஆதரவும், எதிர்ப்பும் பெருகி வருகிறது. நாட்டின் சட்ட திட்டங்களை மதித்து நடக்க வேண்டும் என சிலரும், சவுதி அரேபியாவில் வெளிநாட்டு பெண் ஒருவர் இது போன்று ஆடை அணிந்தால் ஏற்றுக் கொள்ளும் போது, அந்நாட்டு பெண் நவநாகரீக உடை அணிந்ததில் என்ன தவறு என சிலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.