சவுதி அரேபியா 27 ஆண்டுகளுக்குப் பின், நாளை முதல் ஈராக் தலைநகர் பாக்தாத்துக்கு விமான சேவையை தொடங்கவுள்ளது.
கடந்த 1990 ஆம் ஆண்டு குவைத்தை கைப்பற்ற அப்போதைய அதிபர் சதாம் உசேன் ராணுவத்துக்கு உத்தரவிட்டதை தொடர்ந்து பாக்தாத்துக்கு இயக்கி வந்த விமான சேவையை சவுதி நிறுத்திக் கொண்டது. தற்போது பழைய கசப்பான உணர்வுகள் மறைந்து இரு நாட்டுக்கும் இடையே நல்லுறவு மலர்ந்து வருவதைத் தொடர்ந்து நாளை முதல் ஈராக் தலைநகர் பாக்தாத்துக்கு விமான சேவையை தொடங்க சவுதி முன்வந்தது. அதன்படி 27 ஆண்டுகளுக்குப் பின் முதல் முறையாக இயக்கப்படும் இந்த விமானம் சவுதியின் ஜெட்டா நகரில் இருந்து புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.