20 வருடங்களாக கோமாவில் இருந்த சவுதி இளவரசர் காலமானார்.
சவுதி அரேபிய இளவரசரான அல்-வலீத், 2005 ஆம் ஆண்டு தனது 15 வயதில், லண்டனில் கார் விபத்தில் சிக்கினார். இதில் படுகாயமடைந்த அவருக்கு, தலையில் அறுவை சிகிச்சை நடைபெற்றது. அப்போது மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டு, கோமாவிற்கு சென்றார். தொடர்ந்து 20 வருடங்களாக கோமாவில் இருந்து வந்த அல்- வலீத், தூங்கும் இளவரசன் எனவும் அழைக்கப்பட்டு வந்தார்.
இந்தநிலையில் அவர், தனது 36 வயதில் காலமாகியுள்ளார். அவரது மறைவினையொட்டி, சவுதி அரேபிய அரச குடும்பம், மூன்று நாட்கள் துக்கம் அனுசரிக்கவுள்ளது..