சாம்சங் நிறுவனத்தின் அடுத்த படைப்பான எஸ் 11 ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனின் விவரங்கள் இணையத்தில் வெளியாகத் தொடங்கியுள்ளது.
தென்கொரியாவில் மின்சாதனப் பொருட்களின் ஜாம்பவானாகத் திகழும் சாம்சங், குவால்காம் நிறுவனத்துடன் இணைந்து இதுவரை இல்லாத அதிவேக பயன்பாட்டுக்காக ஸ்னாப்டிராகன் 865 பிராசஸர் கொண்ட ஸ்மார்ட்ஃபோனை தயாரித்துள்ளது.
108 மெகா பிக்சல்ஸ் கொண்ட கேமராவில் காணும் காட்சிகள் வழக்கத்தை விட ஐந்து மடங்கு அளவில் ஜூம் செய்து பார்க்கும் வகையிலான லென்ஸ், சிறப்பம்சமாக 200 மெகா பிக்சல்ஸ் ஆடியோ சென்சார் கொண்ட ஸ்மார்ட் ஃபோனாக தயாரித்துள்ளது. 2020 கேலக்ஸி எஸ் சீரிஸ் மொத்தம் மூன்று மாடல்களில் அறிமுகமாகும் என்றும் கூறப்படுகிறது. இவற்றில் ஒரு மாடல் 5ஜி தொழில் நுட்பத்துடன் கூடியதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.