உலகம்

தன்பாலின திருமணங்களை அங்கீகரிக்கும் மசோதா - அமெரிக்க பிரதிநிதிகள் அவையில் நிறைவேற்றம்

webteam

தன்பாலின ஈர்ப்பாளர்கள் செய்யும் திருமணங்களை அங்கீகரிக்கவும், அவர்களுக்கு பாதுகாப்பு வழங்கும் மசோதா அமெரிக்க பிரதிநிதிகள் அவையில் நிறைவேற்றப்பட்டது. குடியரசுக் கட்சியை சேர்ந்த 47 உறுப்பினர்கள் ஜனநாயக் கட்சியினருடன் சேர்ந்து மசோதாவிற்கு ஆதரவாக வாக்களித்தனர். மொத்தமாக மசோதாவிற்கு ஆதரவாக 267 வாக்குகளும் எதிராக 157 வாக்குகளும் பதிவாகின. அடுத்த கட்டமாக அமெரிக்க மேலவையான செனட்டில் இந்த மசோதா விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படும்.

அமெரிக்க உச்சநீதிமன்றம் தன்பாலின திருமணங்களுக்கு எதிராக தீர்ப்பு வழங்கினால் தன்பாலின ஈர்ப்பாளர்களின் உரிமைகளை பாதுகாக்கும் வகையில் இந்த சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. ஏற்கனவே கருக்கலைப்பு தொடர்பான உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக கருக்கலைப்பு உரிமை சட்டமும் அமெரிக்காவின் பிரதிநிதிகள் அவையில் நிறைவேற்றப்பட்டது.