உலகம்

வெயின்ஸ்டீன் மீது மேலும் ஒரு நடிகை பாலியல் குற்றச்சாட்டு

வெயின்ஸ்டீன் மீது மேலும் ஒரு நடிகை பாலியல் குற்றச்சாட்டு

webteam

ஹாலிவுட் தயாரிப்பாளர் ஹார்வீ  வெயின்ஸ்டீன் மீது பாலியல் புகார் அளித்து வரும் பெண்களின் பட்டியலில் பிரபல நடிகை சல்மா ஹாயேக்கும் இணைந்துள்ளார். 

நியூயார்க் டைம்ஸ் இதழுக்காக சல்மா எழுதிய கட்டுரையில், வெயின்ஸ்டீன் அசுர குணம் படைத்தவர் என்றும், தன்னை கொலை செய்து விடுவதாக மிரட்டினார் என்றும் குறிப்பிட்டுள்ளார். ஹார்வீ வெயின்ஸ்டீனால் பாதிக்கப்பட்ட பிற பெண்கள் மனம் திறந்து தங்களது அவலங்களை கொட்டித் தீர்த்து வருவதை தொடர்ந்து, த‌மக்கு ஏற்பட்ட அனுபவத்தையும் பகிர்ந்து கொள்ள முன் வந்ததாக, அந்தக் கட்டுரையில் அவர் குறிப்பிட்டுள்ளார். 

ஹாலிவுட் திரைத்துறையில் கோலோச்சி வந்த தயாரிப்பாளர் ஹார்வீ வெயின்ஸ்டீன், கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக தன்னுடன் பணியாற்றிய நடிகைகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது. அவர் மீது 50க்கும் மேற்பட்ட பெண்கள் புகார் அளித்துள்ளனர். இதனால் அவர் கடும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளார்.