உலகம்

இணையத்தைக் கலக்கும் சஹாரா பாலைவன புகைப்படங்கள்

webteam

உலகின் வெப்பமான பாலைவனமான சஹாரா, பனிப்பொழிவால் நிறைந்திருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் பரவி வருகிறது. 

உலகின் இரண்டாவது மிக நீளமான பாலைவனம் என அழைக்கப்படும் சஹாரா பனிப்பொழிவாகக் காட்சியளிக்கிறது. சஹாரா பாலைவனம் ஆப்பிரிக்காவின் வடபகுதியில் அமைந்துள்ளது. இது உலகிலேயே அதிக வெப்பமானா பாலைவனம் ஆகும். இங்கு வடக்கு அல்ஜீரியாவின் அய்ன்செஃப்ரா என்ற பகுதி உள்ளது. பாலைவனத்தின் நுழைவு வாயில் என அழைக்கப்படும் இப்பகுதியில் சஹாரா பாலைவனம் சுமார் 41 கிலோ மீட்டர் அளவில் பரந்து விரிந்து காணப்படுகிறது. 

வெப்பம் அதிகம் நிலவும் சகாரா பாலைவனத்தின் மணல் பரப்பில் தற்போது பனி படர்ந்துள்ளது. பகல் நேரத்தில் வெப்பம் அதிகரிக்கும் நிலையில் பனி உருகி விழுகிறது. கடந்த 40 ஆண்டுகளில் மூன்றாவது முறையாக சகாரா பாலைவனத்தில் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. முன்னதாக 1979 மற்றும் 2016ஆம் ஆண்டுகளில் பனிப்பொழிவு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், அடர்ந்த நிறம் கொண்ட மண்ணில் பனிப் படர்ந்திருக்கும் புகைப்படங்கள் தற்போது வெளியாகி உள்ளது. கண்களுக்கு விருந்து படைக்கும் விதத்தில் பனிப்பொழிவால் காட்சியளிக்கும் சஹாரா பாலைவனத்தின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.