உக்ரைன் அதிபரின் பேட்டியை வெளியிடக்கூடாது என்று ரஷ்ய ஊடகங்களுக்கு புடின் அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
ரஷ்யாவுடன் நடுநிலைமை குறித்து விவாதிக்க, உக்ரைன் தயாராக உள்ளது என்று ரஷ்ய பத்திரிகையாளர்களிடம் உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி சமீபத்தில் பேட்டி அளித்துள்ளார். அப்பேட்டியில் அவர், `நடுநிலைமை குறித்து முடிவெடுக்கையில், 3-ம் தரப்பினரால் உத்தரவாதம் அளிக்கப்பட்டு, வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்’ என்று கூறியிருந்தார்.
அந்த பேட்டியை வெளியிடக்கூடாது என்று ரஷ்ய ஊடகங்களுக்கு புடின் அரசு தற்போது எச்சரிக்கை விடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே துருக்கியில் இரு நாடுகளுக்கும் இடையிலான அடுத்த கட்ட பேச்சுவார்த்தை இன்று தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதிலாவது சுமுக உடன்பாடு எட்டுமா என்ற எதிர்பார்ப்பு உலக மக்களிடையே எழுந்துள்ளது. ஏற்கெனவே சில தினங்களுக்கு முன்னர் ரஷ்ய அதிபர் புடின், "ரஷ்ய மக்களால் எப்போதுமே தேசப் பற்றாளர்களையும், துரோகிகளையும் பிரித்தறிய முடியும். அதுபோன்ற துரோகிகளை, வாய்க்குள் சென்ற சிறு பூச்சியை போல மக்கள் உமிழ்ந்து விடுவார்கள். தேச துரோகிகளையும், நாட்டுப் பற்று இல்லாதவர்களையும் அப்புறப்படுத்துவதன் மூலம் ரஷ்யாவை சுத்தம் செய்ய முடியும் என நம்புகிறேன். விரைவில் அந்தப் பணி தொடங்கும்" எனக் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய செய்தி: முக்கிய மாநாடு: இலங்கை சென்ற வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்