உலகம்

“2036 வரை நான் தான் ரஷ்யாவின் நிரந்தர அதிபர்!” - சட்டம் இயற்றிய புதின்

EllusamyKarthik

வரும் 2036 வரையில் ரஷ்ய நாட்டின் அதிபராக தொடரும் வகையில் தனக்கு தோதான வகையில் சட்டம் இயற்றியுள்ளார் அந்த நாட்டின் அதிபர் புதின். இதன் மூலம் அடுத்ததாக நடைபெற இருக்கின்ற இரண்டு அதிபர் தேர்தலில் போட்டியிடும் வகையில் சட்டத்தை மாற்றி அமைத்துள்ளார் புதின். தற்போது 68 வயதான அவர் 83 வாயது வரை அதிபராக இருக்கலாம் என கணக்கு போட்டுள்ளார். 

அதிகபட்சமாக இரண்டு முறை மட்டுமே ரஷ்ய அதிபர் தேர்தலில் ஒருவரால் போட்டியிட முடியும். அதை தான் தற்போது நான்கு முறை போட்டியடும் வகையில் சட்டத்தை மாற்றி அமைத்துள்ளார் புதின். ரஷ்ய அதிபரின் பதவி காலம் ஆறு ஆண்டுகள். புதின் கடந்த 2018 தேர்தலில் வென்று இரண்டாவது முறையாக தற்போது அதிபராக உள்ளார்.