உக்ரைன் மீது படையெடுத்து போரிட்டு வருகிறது ரஷ்யா. இந்நிலையில் அமெரிக்கா உட்பட பல்வேறு உலக நாடுகள் ரஷ்யா மீது பொருளாதார ரீதியாக தடைகளை அறிவித்துள்ளன. இது தங்கள் தரப்பில் ரஷ்யாவுக்கு கொடுக்கப்படும் அழுத்தம் என்றும் சில தலைவர்கள் வெளிப்படையாக சொல்லியிருந்தனர். அதே நேரத்தில் பல்வேறு நாடுகளை சேர்ந்த நிறுவனங்களும் ரஷ்யாவுக்கு வழங்கி வந்த தங்களது சேவையை நிறுத்திக் கொள்வதாக தெரிவித்துள்ளன.
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ரஷ்யா மீதான பொருளாதாரத் தடைகள் உலக அளவில் உணவுப் பொருட்களின் விலையை கடுமையாக உயர்த்தும் என ரஷ்ய நாட்டு அதிபர் புடின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
உலக அளவில் உரத் தயாரிப்பில் ரஷ்யா முன்னணியில் இருக்கிறது. பொருளாதாரத் தடைகள் உணவுச் சங்கிலியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என புடின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.