உலகம்

“கொரோனா போலி தொற்றுநோய்” என்று கூறிய ரஷ்ய துறவிக்கு 3.5 ஆண்டுகள் சிறை தண்டனை

Veeramani

கொரோனா தொற்றுநோயை கடுமையாக விமர்சித்த ரஷ்ய துறவி ஃபாதர் செர்ஜி, “ரஷ்யாவுக்காக இறக்க” என்ற தனது பிரசங்கங்களின் மூலம் தன்னைப் பின்பற்றுபவர்களை தற்கொலைக்கு ஊக்குவித்ததாக குற்றம்சாட்டப்பட்டு டிசம்பர் 2020 இல் கைது செய்யப்பட்டார். அவர் தொடர்ந்து கொரோனாவை "போலி தொற்றுநோய்" என்று பிரச்சாரம் செய்ததாகக் கூறப்படுகிறது. மேலும், அவர் தேவாலயத்திற்குச் செல்வதற்கான அரசின் பொதுமுடக்கம் மற்றும் கட்டுப்பாடுகளை மீறுமாறு மக்களை ஊக்குவித்தார் என்று குற்றம்சாட்டப்பட்டது. 

தற்கொலைக்கு தூண்டுதல், மத நம்பிக்கைகளை காயப்படுத்துதல் மற்றும் விழிப்புணர்வை தடுத்தல் ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைதுசெய்யப்பட்ட ரஷ்ய துறவிக்கு மாஸ்கோ நீதிமன்றம் 3.5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது.