I-Phone / Russia Web
உலகம்

ரஷ்யாவில் அரசு அதிகாரிகள் ’iPhone’ பயன்படுத்த தடை! காரணம் இதுதான்!

ரஷ்யாவில் அரசு அதிகாரிகள் ஆப்பிள் ஐஃபோன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

webteam

ரஷ்யாவில் அரசு அதிகாரிகள் ஆப்பிள் ஐஃபோன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. ரஷ்ய மக்களால் பயன்படுத்தப்படும் ஆப்பிள் நிறுவன சாதனங்கள் மூலம் நாட்டுக்குப் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட வாய்ப்புள்ளதாக அந்நாட்டின் முக்கிய உள்நாட்டு பாதுகாப்பு சேவை அமைப்பான எஃப். எஸ்.பி. குற்றம் சாட்டியிருந்தது.

இதனால், ஐஃபோன்கள் மற்றும் ஐபேடுகளை வேலை நோக்கங்களுக்காக ரஷ்ய அரசு அதிகாரிகள் இனி பயன்படுத்தக் கூடாது என அந்நாட்டின் டிஜிட்டல் மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Apple I-Phone

தனிப்பட்ட தேவைகளுக்காக ஐபோன்களைப் பயன்படுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இது தொடர்பான குற்றச்சாட்டுகளை ஆப்பிள் நிறுவனம் மறுத்துள்ளது. முன்னதாக உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்துவரும் தாக்குதல் காரணமாக கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஆப்பிள் நிறுவனம் ரஷ்யாவில் இருந்து வெளியேறியது குறிப்பிடத்தக்கது.