crude oil, Russian Deputy Foreign Minister Andrey Rudenko pt web
உலகம்

"தொடர்ந்து எண்ணெய் ஏற்றுமதி" - ட்ரம்ப் எச்சரிக்கும் நிலையில் ரஷ்ய அமைச்சர் கொடுத்த விளக்கம்

ரஷ்யா, அமெரிக்க அதிபர் டிரம்பின் மிரட்டல்களை மீறி, இந்தியாவுக்கு எண்ணெய் ஏற்றுமதியைத் தொடர்ந்து வருவதாக ரஷ்ய வெளியுறவுத் துறை துணை அமைச்சர் ஆண்ட்ரே ரூடென்கோ தெரிவித்தார்.

PT digital Desk

ரஷ்யா, அமெரிக்க அதிபர் டிரம்பின் மிரட்டல்களை மீறி, இந்தியாவுக்கு எண்ணெய் ஏற்றுமதியைத் தொடர்ந்து வருவதாக ரஷ்ய வெளியுறவுத் துறை துணை அமைச்சர் ஆண்ட்ரே ரூடென்கோ தெரிவித்தார்.

ரஷ்ய எண்ணெய் நிறுவனங்கள் தொடர்ந்து இந்தியாவுக்கு எண்ணெயை ஏற்றுமதி செய்து வருவதாக ரஷ்ய வெளியுறவுத் துறை துணை அமைச்சர் ஆண்ட்ரே ரூடென்கோ தெரிவித்துள்ளார். இந்தத் தகவலை ரஷ்ய அரசு செய்தி நிறுவனமான TASS வெளியிட்டுள்ளது.

Russian Deputy Foreign Minister Andrey Rudenko

ரஷ்ய எண்ணெய் நிறுவனங்கள் இந்தியாவுக்கு எண்ணெய் ஏற்றுமதியைத் தொடர்ந்து வருகின்றன என்று ரூடென்கோ உறுதிப்படுத்தியுள்ளார். ரஷ்ய எண்ணெய்க் கொள்முதலை இந்தியா நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீண்டும் வலியுறுத்திய பின்னணியில், ரஷ்யா இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.

ரஷ்ய எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்தவில்லை என்றால், புதுடெல்லி தொடர்ந்து "மிகப் பெரிய" வரியைச் செலுத்த வேண்டியிருக்கும் என்று டிரம்ப் எச்சரித்திருந்தார். அதோடு, ரஷ்யாவிலிருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதை நிறுத்துவதாக இந்திய பிரதமர் மோடி உறுதியளித்திருக்கிறார் என்று ஓரிரு தினங்களுக்கு முன்புகூட ட்ரம்ப் தெரிவித்திருந்த கருத்து பேசுபொருளானது.

அமெரிக்க அதிபர் ட்ரம்ப்

டிரம்ப்பின் தொடர்ச்சியான அழுத்தம் இருந்தபோதிலும், இந்தியாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் உட்பட இந்திய அதிகாரிகள், நாட்டின் எரிசக்தித் தேவைகள் மற்றும் தேசிய நலன்களைப் பொறுத்தே கொள்முதல் முடிவுகள் எடுக்கப்படுகின்றன என்று தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த அறிவிப்பு, அமெரிக்காவின் வரி மிரட்டல் இருந்தபோதிலும், ரஷ்யா-இந்தியா இடையேயான வலுவான எரிசக்தி உறவுகள் தொடர்ந்து நீடிக்கும் என்பதை ரஷ்ய வெளியுறவு அமைச்சரின் விளக்கம் காட்டுகிறது.