உலகம்

சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு ‌‌ரஷ்ய, அமெரிக்க வீரர்கள் பயணம்

சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு ‌‌ரஷ்ய, அமெரிக்க வீரர்கள் பயணம்

webteam

சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையத்துக்கு அமெரிக்கா மற்றும் ரஷ்ய ‌விண்வெளி வீரர்கள் புறப்பட்டுச் சென்றனர்.

அமெரிக்கா, ரஷ்யா, சீனா உள்ளிட்ட நாடுகள் விண்வெளியில் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை அமைத்து வருகின்றன. இ‌தில் பணியாற்றுவதற்காக சுழற்சி முறையில் பூமியில் இருந்து விண்வெளி வீரர்கள் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர்.

அந்த வகையில் ரஷ்யாவைச் சேர்ந்த வி‌ண்வெளி வீரர்களான கமாண்டர் அலெக்‌சாண்டர் மிசுர்கின் மற்றும் மார்க் வாண்டேவும், அமெரிக்‌காவின் நாசா வீரரான ஜோ அகாபாவும் ‌கஸகஸ்தானில் உள்ள பைக்கானூர் ஏவுதளத்தில் இருந்து விண்வெளி ஓடத்தில் புறப்பட்டுச் சென்றனர். அவர்கள் சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையத்தில் உள்ள நாசாவின் ரேண்டி பிரெஸ்னிக், ரஷ்யாவின் செர்ஜி மற்றும் பாலோ நெஸ்பாலியுடன் இணைந்து ப‌ணியாற்றுவார்கள்.