சூடானில் உள்ள நீச்சல் குளத்தில் ரஷ்ய தூதர் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.
சூடானுக்கான ரஷ்ய தூதராக மிர்கயாஸ் ஷிரின்ஸ்கி இருந்தார். இவர் அந்நாட்டின் உள்ள கார்டோமில் பகுதியில் வசித்து வந்தார். இந்நிலையில், மிர்கயாஸ் அவரது வீட்டில் உள்ள நீச்சல் குளத்தில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். இவர் உயர் ரத்த அழுத்தம் ஏற்பட்டதன் காரணமாக, இயற்கையான முறையில் மரணம் அடைந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் மேற்கொண்டு விசாரித்து வருகின்றனர்.
இதனிடையே, சூடானின் வெளியுறவு அமைச்சகம் மிர்கயாஸ் இறப்பிற்கு இரங்கல் தெரிவித்துள்ளது.