உலகம்

அமெரிக்காவின் பொருளாதார தடைக்கு ரஷ்யா பதிலடி!

அமெரிக்காவின் பொருளாதார தடைக்கு ரஷ்யா பதிலடி!

webteam

அமெரிக்காவின் பொருளாதார தடையை முறியடிக்க, சர்வதேச வர்த்தகத்தில் இருந்து டாலரை நீக்கும் நடவடிக்கையை ரஷ்யா மேற்கொள்ளும் என அந்நாட்டின் பொருளாதார நிபுணர் தெரிவித்துள்ளார்.

பிரிட்டனில் வசித்து வந்த ரஷ்யாவின் முன்னாள் உளவாளி செர்ஜி ஸ்கிரிபால், அவரது மகள் யூலியா ஆகியோர் மீது நரம்பு மண்டலங்களை பாதிக்கும் ரசாயன தாக்குதல் நடத்தப்பட்டது. இதற்கு ரஷ்யாவே காரணம் என பிரிட்டன் குற்றம்சாட்டியது. இதையடுத்து ரஷ்யா மீது புதிய பொருளாதார தடைகளை அமெரிக்கா விதித்தது.

இந்நிலையில் அமெரிக்காவுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக சர்வதேச வர்த்தகத்தில் இருந்து டாலரை நீக்கும் முயற்சியில் ரஷ்யா தொடர்ந்து ஈடுபடும் என அந்நாட்டின் பொருளாதா‌ர நிபுணரான வியாசெஸ்‌லாவ் கோலோட்கோவ் தெரிவித்துள்ளார். 

இதற்காக துருக்கி, ஈரான் போன்ற நாடுகளுடன் சொந்த நாட்டு கரன்சியில் தான் ரஷ்யா வர்த்தகம் செய்து வருவதாகவும் அவர் கூறினார். சர்வதேச வர்த்தகத்தில் அமெரிக்க டாலரின் பயன்பாட்டை ரஷ்யா நிறுத்திக் கொண்டால், அது அமெரிக்க பொருளாதாரத்தை தான் சீர்குலைக்கும் என்றும், இதுதான் அமெரிக்காவுக்கு ரஷ்யா தரும் பதிலடி என்றும் வியாசெஸ்லாவ் தெரிவித்தார்.