உலகம்

உக்ரைனிலிருந்து இதுவரை எத்தனை மாணவர்கள் மீட்பு? - மத்திய அரசு தகவல்

நிவேதா ஜெகராஜா

உக்ரைனில் இருந்து வெளியேறி ருமேனியா மற்றும் ஹங்கேரியில் தங்கியிருந்த மேலும் 393 மாணவர்கள் இரு விமானங்களில் இன்று காலை தாயகம் திரும்பியுள்ளனர்.

முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பக்ஷி, “உக்ரைனில் இருந்து இதுவரை 13,300 பேர் பத்திரமாக மீட்கப்பட்டு, தாயகம் அழைத்து வரப்பட்டிருக்கின்றனர். மேலும் 2,000-க்கும் மேற்பட்டோர் உக்ரைனுக்கு வெளியே விமானத்திற்காக காத்திருக்கின்றனர். அவர்களை அழைத்து வர 15 விமானங்கள் அங்கு சென்றிருக்கிறது. உக்ரைனில் இருந்து புறப்படும் விமானத்தில் நேபாளம், வங்கதேசத்தை சேர்ந்த ஒருவரையும் உடன் அழைத்து வர ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

சுமியில் தான் தற்போது பிரச்னை நிலவுகிறது. அனைத்து இடங்களிலும், போரை நிறுத்த இரு தரப்பையும் கேட்டுக் கொண்டிருக்கிறோம். சுமியில் இருக்கும் மாணவர்கள் பல்கலைக்கழகங்களில் பாதுகாப்பாக இருக்கின்றனர். அவர்களை இந்திய மீட்பு படைகளை தற்போது கிழக்கு நோக்கி நகர்த்தி வருகின்றனர். இதற்கிடையே ருமேனியாவில் தங்கியிருந்த மேலும் 210 பேர் விமானப்படை விமானம் மூலம் டெல்லி திரும்பியுள்ளனர்” என்று கூறினார்.