உலகம்

அதிபர் தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு: ட்ரம்ப் மகன் பகிரங்க சாட்சியளிக்க கோரிக்கை!

அதிபர் தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு: ட்ரம்ப் மகன் பகிரங்க சாட்சியளிக்க கோரிக்கை!

webteam

அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்யாவின் குறுக்கீடு இருந்தது தொடர்பான விசாரணை தொடங்குவதற்கு முன், அதிபர் ட்ரம்பின் மூத்த மகன் பொதுமக்கள் முன்னிலையில் சாட்சியம் அளிக்க வேண்டும் என ஜனநாயக கட்சியின் எம்பி டியான்னே ஃபெய‌ன்ஸ்டெயின் வலியுறுத்தியுள்ளார்.

அமெரிக்காவில் கடந்த ஆண்டு அதிபர் தேர்தல் நடந்தபோது அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு சாதகமாக தேர்தல் முடிவுளை மாற்றும் வகையில் எதிர்க்கட்சி வேட்பாளரான ஹிலாரியின் ரகசிய மின்னஞ்சல்களை ரஷ்யா ஹேக் செய்து வெளியிட்டதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக அமெரிக்காவின் புலனாய்வு அமைப்பான எஃப்பிஐ விரிவாக விசாரணை நடத்தி வருகிறது. கடந்த 7ஆம் தேதி ட்ரம்பின் மூத்த மகனான ஜூனியர் ட்ரம்பிடம் செனட் சபையின் விசாரணை குழு 5 மணி நே‌ரம் வரை ரகசிய விசாரணை நடத்தியது.

இந்நிலையில் ரஷ்யாவுடனான தொடர்பு குறித்து ஜூனியர் ட்ரம்ப் பொதுமக்கள் முன்னிலையில் பகிரங்கமாக சாட்சியம் அளிக்க முன்வர வேண்டும் என ஜனநாயக கட்சியின் எம்.பி.யும் விசாரணை குழுவின் உறுப்பினருமான டியான்னே ஃபெயன்ஸ்டெயின் வலியுறுத்தியுள்ளார்.