உலகம்

கைப்பற்றப்பட்ட உக்ரைன் பகுதிகளை இணைத்துக்கொள்ள ரஷ்யா திட்டம் - நவம்பரில் தீர்மானம்?

JustinDurai

உக்ரைனில் ரஷ்ய படைகள் ஆக்கிரமித்துள்ள பகுதிகளை ரஷ்யாவுடன் இணைக்கக் கோரும் தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடத்தும்படி வரும் நவம்பர் 4ம் தேதி ரஷ்ய ஆளும் கட்சி முன்மொழிய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகளுக்கு இடையேயான போர் 6 மாதங்களுக்கும் மேலாக நீடித்து வருகிறது. நாளுக்கு நாள் தீவிரமடையும் போரில் ரஷ்யாவின் மும்முனை தாக்குதலால் உக்ரைனின் முக்கியமான நகரங்கள் பல கைப்பற்றப்பட்டுள்ளன. இந்த படையெடுப்பில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பகுதிகளாக ரஷ்யா கைப்பற்றி வருகிறது. இந்நிலையில் உக்ரைனில் ரஷ்ய படைகள் ஆக்கிரமித்துள்ள பகுதிகளை ரஷ்யாவுடன் இணைக்கக் கோரும் தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடத்தும்படி வரும் நவம்பர் 4ம் தேதி ரஷ்ய ஆளும் கட்சி முன்மொழிய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ரஷ்யாவிடம் இழந்த பகுதிகளை மீட்பதற்கு உக்ரைன் ராணுவம் தமது தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது.

முன்னதாக, ரஷ்ய மொழி பேசுபவர்களுக்கு ஆதரவாக உள்ள 'ரஷ்ய உலகம்' என்ற கருத்தை அடிப்படையாகக் கொண்ட புதிய வெளியுறவுக் கொள்கையை செயல்படுத்த அந்நாட்டு அதிபர் புதின் ஒப்புதல் வழங்கினார்.

இதையும் படிக்க: ``புதிய தொழில் ஆரம்பிக்கணுமா? எங்க நாட்டுக்கு வாங்க!”-இந்தியர்களுக்கு கரம் நீட்டிய கியூபா!