உலகம்

உக்ரைனுடன் பேச்சுவார்த்தை தொடரும் - ரஷ்ய அதிபர் புடின்

Sinekadhara

உக்ரைனுடன் பேச்சுவார்த்தை தொடரும் என்றும் விரைவில் நல்ல முடிவுகள் கிடைக்கும் எனவும் ரஷ்ய அதிபர் புடின் தெரிவித்துள்ளார்.

பிப்ரவரி 24 ஆம் தேதி முதல் உக்ரைனுக்குள் புகுந்து ரஷ்ய ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. அண்மையில் துறைமுக நகரான மரியுபோலை கைப்பற்றிவிட்டதாக அறிவித்தது. இச்சூழ்நிலையில், ஐக்கிய நாடுகள் அவையின் பொதுச் செயலாளர் அன்டோனிய கட்டரஸ், மாஸ்கோவில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை சந்தித்து ஆலோசனை நடத்தினார். அப்போது பேசிய புடின், உக்ரைனுடன் இணைய வழியில் பேச்சுவார்த்தை தொடரும் என்றும், நல்ல முடிவுகள் கிடைக்கும் என நம்புவதாகவும் கூறினார்.

மரியுபோல் நகரில் எஃகு ஆலையில் சிக்கியுள்ள பொதுமக்களை பத்திரமாக வெளியேற அனுமதிக்க வேண்டும் என கட்டரஸ் கோரிக்கை விடுத்தார். இதற்கு பதிலளித்த புடின், உக்ரைன் ராணுவம் பொதுமக்களை கேடயமாக பயன்படுத்துவதாக குற்றம்சாட்டினார்.