ரஷ்யாவில் ஐந்தாவது வாரமாக பொதுமுடக்கம் நீடிப்பதால், தலைநகர் மாஸ்கோ ஆள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்படுகிறது.
ரஷ்யாவில் கொரோனா வைரஸின் தாக்கம் தீவிரமடைந்திருப்பதால், மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். இதையடுத்து, பொதுமக்கள் தீவிர பொது முடக்கத்தை கடைபிடித்து வருகின்றனர். இதன் காரணமாக தலைநகர் மாஸ்கோ மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்படுகிறது. கடந்த வாரத்தை காட்டிலும் தற்போது கொரோனா குறித்த அச்சம் ரஷ்ய மக்களிடையே அதிகரித்திருப்பதே இதற்கு காரணம் எனக் கூறப்படுகிறது.
இதற்கிடையே, மாஸ்கோவில் வைரஸ் பரவலை தடுக்க கிருமிநாசினி தெளிக்கும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், வீடுகளை விட்டு வாகனங்களில் வருபவர்களையும் காவல்துறையினர் தீவிரமாக கண்காணித்து, அத்தியாவசிய தேவைக்கு மட்டுமே வெளியே செல்ல அனுமதித்து வருகின்றனர்.
ரஷ்ய நிலவரம்:
கொரோனா பாதிப்பு - 1,24,054
கொரோனாவுக்கு உயிரிழப்பு - 1,222
குணமடைந்தோர் - 15,013