மீட்புப்பணிக்காக உக்ரைன் மீதான போரை தற்காலிகமாக நிறுத்துவதாக ரஷ்யா அறிவித்துள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா மீது உக்கிரமாக போர் நடத்தி வருகிறது. போரை நிறுத்த நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகள் தோல்வியை தழுவின. இந்நிலையில், கடந்த 9 நாட்களாக உக்ரைனில் கடுமையான தாக்குதலை நடத்திவந்த ரஷ்யா தற்காலிக போர் நிறுத்தத்தை அறிவித்துள்ளது. பொதுமக்கள் உள்ள பகுதிகளில் மீட்புப்பணிக்காக மனிதாபிமான அடிப்படையில் தற்காலிக போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
மாணவர்களை மீட்கும் பணிக்காக போர் நிறுத்தம் செய்யுமாறு இந்தியா ஏற்கனவே வலியுறுத்தியிருந்தது. ரஷ்யா நடத்திய தாக்குதலில் நூற்றுக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளதாக உக்ரைன் ஏற்கனவே தெரிவித்திருந்தது. இந்திய நேரப்படி காலை 11.30 மணி முதல் தற்காலிக போர் நிறுத்தம் அமலுக்கு வந்துள்ளது.