உலகம்

ரூ.6.5 கோடி மதிப்பிலான யானைத் தந்தங்கள் பறிமுதல்

Rasus

மலேசியாவிலிருந்து வெளிநாடுகளுக்குக் கடத்த முயன்ற ஆறரை கோடி ரூபாய் மதிப்பிலான யானைத் தந்தங்கள் மற்றும் எறும்புண்ணி செதில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பிற ஆசிய நாடுகளுக்கு சட்ட விரோதமா‌க வன விலங்கு சார்ந்த பொருள்களை கடத்தும் மையமாக மலேசியா விளங்குவதை தடுக்கும் பொருட்டு தற்போது அந்நாட்டு அரசு தீவிர நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. கடந்த மாதம் மட்டும் ஏழாயிரத்து 200 கிலோ எடையுடைய யானை தந்தங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் இது கடந்த 30 ஆண்டுகளில் ஒரே முறையில் பறிமுதல் செய்யப்பட்டதில், அதிகபட்ச அளவு எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

கடந்த ஒரு மாதத்தில், தொடர்ந்து யானை தந்தங்கள் மற்றும் எறும்புண்ணி செதில்கள் அதிக அளவு பறிமுதல் செய்யப்பட்டு வருவதாகவும் மலேசிய விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.