உலகம்

ரோஹிங்ய முஸ்லிம்களை தங்க வைக்க தயாராகும் தனித்தீவு

ரோஹிங்ய முஸ்லிம்களை தங்க வைக்க தயாராகும் தனித்தீவு

webteam

மியான்மரில் இருந்து அகதிகளாக வரும் ரோஹிங்ய முஸ்லிம்களை தனித் தீவில் தங்க வைத்து பாதுகாக்க சர்வதேச நாடுகள் உதவிக் கரம் நீட்ட வேண்டும் என வங்கதேச அரசு கோரிக்கை விடுத்துள்ளது.

மியான்மரின் ரக்கைன் மாகாணத்தில் வசித்து வரும் ரோஹிங்ய இன முஸ்லிம்களை ‌தங்களது குடிமக்களாக அங்கீகரிக்காமல் அவர்களுக்கு எதிராக அந்நாட்டு அரசு அடக்குமுறையை ஏவிவிட்டுள்ளது. இதனால்,வெடித்த வன்முறை காரணமாக உயிருக்கு பயந்து இதுவரை மூன்று லட்சத்துக்கும் மேற்பட்ட ரோஹிங்ய இன முஸ்லிம்கள் வங்கதேச எல்லையில் தஞ்சமடைந்துள்ளனர். 

மனிதநேய அடிப்படையில் அவர்களுக்கு உதவ முன்வந்துள்ள வங்கதேச அரசு, மியான்மர் எல்லையை ஒட்டிய காக்ஸ் பஜார் அருகே குடியிருப்புகளை கட்டி வருகிறது. தற்போது நாளுக்கு நாள், அகதிகளாக வரும் ரோஹிங்ய மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், பசன் சார் தீவில் 10 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் அவர்களை குடியமர்த்த முடிவு செய்துள்ளது. எனினும் அந்தப் பகுதியில் அவ்வப்போது கடல் கொள்ளையர்கள் அட்டகாசத்தில் ஈடுபடுவதால் அந்த தீவை மேம்படுத்த சர்வதேச நாடுகள் கை கொடுக்க வேண்டும் என வங்கதேச அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.