உலகம்

வீட்டு வாடகையை விட மின் கட்டணம் அதிகம் - எந்த நாட்டில் தெரியுமா?

வீட்டு வாடகையை விட மின் கட்டணம் அதிகம் - எந்த நாட்டில் தெரியுமா?

Veeramani

துருக்கியில் பணவீக்கம் அதிகரித்ததால், அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்த நிலையில், அடுத்த அதிர்ச்சியாக வீட்டு வாடகையை விட, மின் கட்டணம் கூடுதலாக விதிக்கப்பட்டுள்ளது.

இதனால், ஆவேசம் அடைந்த பொதுமக்களும், கடை வியாபாரிகளும் மின்கட்டண ரசீதுகளை தீயிட்டு கொளுத்தி தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர். தலைநகர் அங்காராவில் பிரதான எதிர்க்கட்சியான குடியரசு மக்கள் கட்சி சார்பில் நடந்த போராட்டத்தில் திரளானோர் கலந்து கொண்டு நகரின் மையத்தில் மின்கட்டண ரசீதுகளை தீ வைத்து எரிந்தனர்.

தென்கிழக்கு மாகாணமான தியார்பகிரில் திரண்ட கடை வியாபாரிகள் கூடுதல் மின் கட்டண வசூலுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினர். பணவீக்கம் அதிகரித்து வருவதால் துருக்கியில் சமையல் சிலிண்டர், மின்கட்டணம், பெட்ரோல், சுங்க கட்டணம் ஆகியவை கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால், தினசரி வாழ்க்கையில் பல்வேறு இன்னல்களை பொதுமக்கள் சந்தித்து வருவதாக கூறப்படுகிறது.