உலகம்

ஜப்பானில் கொரோனா தொற்று அதிகரிப்பு: டோக்கியோவில் அவசர நிலை நீட்டிப்பு

ஜப்பானில் கொரோனா தொற்று அதிகரிப்பு: டோக்கியோவில் அவசர நிலை நீட்டிப்பு

jagadeesh

ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும் நிலையில், ஜப்பானில் மேலும் 4 நகரங்களில் கொரோனா கால அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் கடும் கட்டுப்பாடுகளுடன் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், ஜப்பானில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த நாட்டில் இதுவரை இல்லாத அளவுக்கு தினசரி கொரோனா பாதிப்பு 10 ஆயிரத்தை கடந்துள்ளது. இதனால், போட்டிகள் நடைபெறும் டோக்கியோவை சுற்றியுள்ள மேலும் 4 நகரங்களில் அவசர நிலையை அந்நாட்டு அரசு பிரகடனம் செய்துள்ளது.

இந்த கட்டுப்பாடுகள் ஆகஸ்ட் 31வரை அமலில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.