உலகம்

ஒட்டகச்சிவிங்கியிடம் உதைப்பட்டு பயத்தில் ஓட்டம் எடுக்கும் காண்டாமிருகம்: வைரல் வீடியோ

sharpana

மிகப்பெரிய விலங்குகளில் ஒன்றும் எடை அதிகமும் கொண்ட விலங்குமான காண்டாமிருகம் ஒட்டகச் சிவிங்கியிடம் பின்னங்காலால் உதைப்பட்டு பயந்து பதறியடித்துக்கொண்டு ஓடும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரல் ஆகியுள்ளது. 

 உலகின் மிக உயரமான விலங்கு என்றால் அது ஒட்டகச்சிவிங்கிதான். 16 அடி முதல் 18 அடிவரை வளரக்கூடியவை. அதேபோல்தான், பெரிய விலங்குகளில் காண்டாமிருகமும் ஒன்று. இதன் எடை 3000 கிலோ வரை கொண்டது. மூக்கு கொம்பன் என்று அழைக்கப்படும் காண்டா மிருகம் உலகில் இந்தியா, ஆப்பிரிக்கா, நேபாளம், பூடான்,சுமத்ரா தீவுகளில் மட்டுமே வாழ்கிறது. காண்டாமிருகம் என்றாலே எல்லோரும் அலறியடித்து ஓடுவார்கள். அதன் உருவமும் கொம்புகளையும் பார்த்தாலே குலை நடுங்க வைக்கும். 

ஆனால், இந்திய வனத்துறை அதிகாரி சுசாந்தா நந்தாவின் ட்விட்டர் வீடியோவில், காண்டா மிருகம் ஒன்று வனப்பகுதியில் நின்றிருக்கும் ஒட்டகச்சிவியின் பின்புறம் சென்று அதனை தொடுகிறது. உடனே ஒட்டகச்சிவிங்கி காண்டாமிருகத்தின் முகத்தில் ஓங்கி பின்னங்காலால் உதைக்கிறது. திடீர் தாக்குதலால் நிலைகுலைந்துபோன காண்டாமிருகம் ஒட்டகச்சிவிங்கி உடலைத் திருப்புவதற்குள் பயத்தில் பதறியடித்துக்கொண்டு வேகமாக ஓடுகிறது. இந்த வீடியோவை பலரும் காமெடியுடன் பகிர்ந்து வருகிறார்கள்.

பொதுவாகவே காண்டாமிருகம் 1 மணி நேரத்திற்கு 40 கிலோமீட்டர்கள் வரை ஓடும் தன்மைக்கொண்டது. ஆனால், ஒட்டகச்சிவிங்கி காலில் உதைப்பட்டு அது ஓடும் வேகத்தைப் பார்த்தால் 1 மணிக்கு 40 அல்ல 400 கிலோமீட்டரே ஓடும்போல.