உலகம்

சூட்கேஸுக்குள் மறைந்து வந்த அகதி

சூட்கேஸுக்குள் மறைந்து வந்த அகதி

webteam

சூட்கேஸுக்குள் அகதியை அடைத்து எடுத்துச் சென்ற பெண்ணை ஸ்பெயின் காவல்துறையினர் கைது செய்தனர்.

ஆப்பிரிக்காவின் மொராக்கோ நாட்டில் இருந்து ஸ்பெயின் நாட்டின் சியூட்டா பிராந்தியத்துக்குள் அந்தப் பெண் நுழைய முயன்றார். அவர் வைத்திருந்த சூட்கேஸை சோதனை செய்தபோது, அதற்குள் ஆப்பிரிக்க இளைஞர் ஒருவர் அடைத்து வைக்கப்பட்டிருந்ததை காவல்துறையினர் கண்டுபிடித்தனர். இதையடுத்து, அந்த இளைஞரும் பெண்ணும் கைது செய்யப்பட்டனர். விசாரணையில் அந்த ஆப்பிரிக்க இளைஞர் அகதி என்பதும் மெராக்கோ நாட்டைச் சேர்ந்தவர் எனவும் தெரியவந்தது. மொராக்கோ நாட்டில் இருந்து சியூட்டா பிராந்தியம் வழியாக ஸ்பெயினுக்குள் நுழைவதற்கு ஏராளமான ஆப்பிரிக்க அகதிகள் முயற்சி செய்து வருகிறார்கள்.