உலகம்

லிபியா: ஐரோப்பாவுக்கு தப்ப முயன்ற அகதிகள்... படகை விரட்டி அடித்த கடற்படை கப்பல்

லிபியா: ஐரோப்பாவுக்கு தப்ப முயன்ற அகதிகள்... படகை விரட்டி அடித்த கடற்படை கப்பல்

webteam

லிபியாவில் இருந்து கடல் வழியே ஐரோப்பா நோக்கி புறப்பட்ட அகதிகள் படகினை, கடற்படையினர் விரட்டி அடித்த வீடியோ வெளியாகியுள்ளது.

உள்நாட்டு போர், வறுமை உள்ளிட்ட காரணங்களால் மத்திய கிழக்கு நாடுகளை சேர்ந்தவர்கள் சட்டவிரோதமாக லிபியா வழியே ஐரோப்பா நாடுகளுக்கு செல்கின்றனர்.

இதனை தடுக்கும் பொருட்டு லிபியா கடல் எல்லையில் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அப்படி லிபியாவில் இருந்து சட்டவிரோதமாக ஐரோப்பாவுக்கு செல்ல முயன்ற அகதிகள் படகினை கடற்படை கப்பல் ஒன்று எல்லையில் இருந்து விரட்டிய வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

இவ்வாறு சிறிய படகுகளில் அதிகமானவர்களை ஏற்றி செல்வதால் படகுகள் கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாவது தொடர்கதையாக உள்ளது.