உலகம்

இயல்புநிலைக்கு திரும்பாத மொசூல் நகரம்

webteam

ஐஎஸ் தீவிரவாதிகளிடமிருந்து மோசூல் நகரம் மீட்கப்பட்டு ஒரு மாதமாகியும் இன்னும் அங்கு இயல்புநிலை திரும்பவில்லை. மறு கட்டமைப்புப்பணிகள் முடிந்து இயல்பு வாழ்க்கை திரும்ப பல ஆண்டுகள் ஆகும் என மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

ஐஎஸ் தீவிரவாதிகளிடம் இருந்து ஈராக்கின் மொசூல் நகரம் மீட்கப்பட்டு ஒரு மாதம் நிறைவடைந்த நிலையிலும், உள்கட்டமைப்புகளைச் சீரமைப்பதில் பெரிய முன்னேற்றம் ஏற்படவில்லை. 8 மாதங்களுக்கும் மேலாக நடந்த சண்டையில் நகரின் கட்டடங்கள் அனைத்தும் தரைமட்டமாகி இருப்பதால், சொந்த வீடுகளுக்கு திரும்பிய மக்கள் அனைவரும் தங்களது எதிர்காலம் குறித்த அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். தற்போது பாதுகாப்பாக உணர்ந்தாலும், இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவதற்கு பல ஆண்டுகள் ஆகும் என மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

மொசூல் நகரை மறுகட்டமைப்புக்கான வேலை துவங்க சுமார் 1 பில்லியன் அமெரிக்க டாலர் செலவாகும் என ஐநா மதிப்பிட்டுள்ளது.