காங்கோ எக்ஸ் தளம்
உலகம்

காங்கோ | கிளர்ச்சிப் படையினரின் தொடர் தாக்குதல்.. 7 ஆயிரம் மக்கள் பலி!

காங்கோவில் கிளர்ச்சிப் படையினர் நடத்திவரும் தாக்குதலில் இதுவரை அப்பாவி மக்கள் 7 ஆயிரம் உயிரிழந்திருப்பதாக அந்நாட்டு பிரதமர் ஜூடித் சுமின்வா துலுகா தெரிவித்துள்ளார்.

Prakash J

மத்திய ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்று, காங்கோ. இங்கு, பல ஆண்டுகளாக உள்நாட்டுப்போர் நடைபெற்றுவருகிறது. அதேவேளை காங்கோவில் பல்வேறு பயங்கரவாத குழுக்களும் செயல்பட்டு வருகின்றன. பயங்கரவாத குழுக்கள் அவ்வப்போது பொதுமக்கள் மீதும் பாதுகாப்புப் படையினர் மீதும் தாக்குதல் நடத்தி வருகின்றனர். அவர்களை அழிக்கும் பணியில் பாதுகாப்புப் படையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். என்றாலும் இந்த மோதலால் அப்பாவி மக்களின் உயிர்கள் பலியாக்கப்படுகின்றன.

இந்த நிலையில், கிழக்கு ஆப்பிரிக்க நாடான ருவாண்டாவின் ஆதரவு பெற்று இயங்கி வரும் கிளர்ச்சிப் படையான 'எம்23' (M23), தெற்கு கிவூ மாகாணத்திலுள்ள கவுமு விமான நிலையத்தை கைப்பற்றியதாக கடந்த பிப்.14ஆம் தேதி தெரிவித்திருந்தது.

காங்கோ

தொடர்ந்து இந்த வார தொடக்கத்தில் முக்கியத்துவம் வாய்ந்த புகாவு நகரைக் கைப்பற்றியது. காங்கோவில் நாளுக்கு நாள் கிளர்ச்சிப் படைகள் செலுத்திவரும் நிலையில், அங்குள்ள மக்களின் கேள்விக்குள்ளாகி இருக்கிறது. கிளர்ச்சிப் படையினர் தீவிர தாக்குதல் நடத்தி பல புதிய பகுதிகளைக் கைப்பற்றியதில் இதுவரை அப்பாவி மக்கள் 7 ஆயிரம் உயிரிழந்திருப்பதாக அந்நாட்டு பிரதமர் ஜூடித் சுமின்வா துலுகா தெரிவித்துள்ளார்.

நேற்று நடைபெற்ற மனித உரிமைகள் கவுன்சிலின் உயர்மட்டக் கூட்டத்தில் இத்தகவலை அவர் தெரிவித்தார். மேலும் அவர், ”90 இடம்பெயர்வு முகாம்கள் அழிக்கப்பட்ட பின்னர் சுமார் 4,50,000 மக்கள் தங்குமிடம் இல்லாமல் உள்ளனர்” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.