உலகம்

திமிங்கலத்தின் வாய்க்குள் சிக்கிய கடல்சிங்கம் - அபூர்வ புகைப்படம் 

திமிங்கலத்தின் வாய்க்குள் சிக்கிய கடல்சிங்கம் - அபூர்வ புகைப்படம் 

webteam

அமெரிக்காவில் திமிங்கலத்தின் ‌‌வாய்க்குள் கடல் சிங்கம் ‌ஒன்று சிக்கிய புகைப்படம் வெளியாகியுள்ளது. 

கலிபோர்னியாவில் உள்ள மான்டேரி விரிகுடா கடற்கரையில்‌ படகில் சென்றுகொண்டிருந்த லாஸ் ஏஞ்சல்ஸ் நகரை சேர்ந்த வனவிலங்கு புகைப்படக் கலைஞர் சேஸ் டெக்கர்‌, கடலிலிருந்த மீன்களையும், மேலே பறந்துகொண்டிருந்த பறவைகளையும் படம் பிடித்துக் கொண்டிருந்தார். 

அப்போது நடுக்கடலில் ஹம்ப்பேக் திமிங்கலம் ஒன்றின் வாய்க்குள் கடல் சிங்கம் சிக்கும் காட்சியை புகைப்படமாக பதிவு செய்தார். இந்த புகைப்படத்தை சேஸ் டெக்கர் அவரது இன்ஸ்டாகி‌‌ராம் பக்கத்தில் ‌பதிவிட்டுள்ளார். திமிங்கலம் வாயை மூடுவதற்குள் கடல் சிங்கம் வேகமாக நீந்தி உயிர் பிழைத்துவிட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.