உலகம்

`அடுத்த 2 வாரங்கள் மிகவும் தீர்க்கமான நாட்கள்’- இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க

நிவேதா ஜெகராஜா

அடுத்த இரண்டு வாரங்கள் தமக்கு மிகவும் தீர்க்கமான நாட்களாக அமையப் போகின்றன என இலங்கையின் புதிய பிரதமராக பதவியேற்றுள்ள ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

காணொளி ஒன்றை வெளியிட்டு உரையாற்றிய அவர், போராட்டம் நடத்தும் இளைஞர்கள் முன்வைக்கும் நிபந்தனைகளின் அடிப்படையில் அவர்களுடன் பேசத் தயாராக இருப்பதாக உறுதியளித்தார். போராட்டத் தளங்கள் மீது அடக்குமுறை ஏவப்படாது என்றும் ரணில் குறிப்பிட்டார். இலங்கையின் பொருளாதாரம் குறித்து உலக நாடுகளின் தலைவர்கள் மற்றும் தூதுவர்களுடன் பேசி வருவதாக ரணில் தெரிவித்தார்.

இலங்கையின் தற்போதைய நிலை குறித்து சிறப்பு அறிக்கை ஒன்றை வெளியிடவிருப்பதாக பிரதமர் அறிவித்தார். அதிபர் கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபடுபவர்களின் தேவைகைளை அறிந்து நிறைவேற்ற குழு ஒன்றை நியமித்துள்ளதாகவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.