உலகம்

இலங்கையில் நீடிக்கும் அரசியல் குழப்பம்.. ரணில் கட்சியினருடன் சிறிசேன பேச்சுவார்த்தை..!

இலங்கையில் நீடிக்கும் அரசியல் குழப்பம்.. ரணில் கட்சியினருடன் சிறிசேன பேச்சுவார்த்தை..!

Rasus

இலங்கையில் அரசியல் குழப்பத்துக்கு தீர்வு காண நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை நிரூபிக்கப்பட வேண்டும் என அதிபர் சிறிசேன கூறியுள்ளார்.

கொழும்பில் அதிபர் மைத்திரிபால சிறிசேனவிற்கும், ரணில் விக்ரமசிங்கவின் ஐக்கிய தேசிய முன்னணியினருக்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. சிறிசேன அழைப்பின் பேரில் நடைபெற்றக் கூட்டத்தில், தமிழ் தேசிய கூட்டமைப்புத் தலைவர் சம்பந்தன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஆனால் ரணில் விக்கரமசிங்க பங்கேற்கவில்லை.

அப்போது, வரும் 5-ம் தேதி தொடங்கும் நாடாளுமன்றக் கூட்டத்தில் இப்பிரச்னை தீர்க்கப்படும் என சிறிசேன உறுதியளித்துள்ளதாக சம்பந்தன் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை நிரூபிக்கப்பட்டால் பிரச்னை முடிவுக்கு வரும் என சிறிசேன கூறியதாக தமிழ் தேசிய கூட்டமைப்பினர் தெரிவித்தனர். ஏற்கெனவே 3 முறை ராஜபக்சவிற்கு எதிரான தீர்மானம் வெற்றியடைந்த நிலையில் சிறிசேன மீண்டும் இவ்வாறு கூறியுள்ளார்.

ரணில் விக்ரமசிங்கவை பிரதமர் பதவியில் இருந்து நீக்கிய அதிபர் சிறிசேன, மகிந்த ராஜபக்சவையில் நியமித்தார். இதனால் இலங்கையில் அரசியல் குழுப்பம் நீடித்து வருகிறது.