அமெரிக்க அதிபர் ட்ரம்ப், தனது தோல்வியை ஏற்க மறுத்து, தேர்தலில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக தொடர்ந்து கூறிவருகிறார். இந்நிலையில், வீதிக்கு வந்து ஆதரவாளர்கள் குரல் கொடுக்க தொடங்கியுள்ளனர். வாஷிங்டனில் ஆயிரக்கணக்கானோர் திரண்டு பேரணியாக சென்றனர்.
சில இடங்களில் போராட்டங்களும் நடைபெற்றன. மில்லியன் மெகா மார்ச், மார்ச் ஃபார் ட்ரம்ப் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் ட்விட்டரில் பதிவிட்டு ட்ரம்புக்கு தங்களது ஆதரவினை தெரிவித்துள்ளனர். இந்நிலையில், வடக்கு விர்ஜீனியாவில் உள்ள கோல்ஃப் மைதானத்துக்கு செல்ல திட்டமிட்டிருந்த ட்ரம்ப், பேரணி நடைபெறுவதை அறிந்து அந்த வழியாகவே காரில் சென்று ஆதரவு தெரிவித்தார்.
ட்ரம்ப் ஆதரவாளர்களின் போராட்டத்துக்கு ஈடுகொடுக்கும் வகையில், பைடன் ஆதரவாளர்களும் களத்தில் குதித்துள்ளனர்.